புதுச்சேரியில் இயங்கி வரும் ‘தேடல் சேவகன்’ என்ற சேவை அமைப்புக்கு, புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் KPYபாலா, நேற்று(டிசம்பர் 14)தனது சொந்த செலவில் விலையில்லா ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கி மக்கள் சேவையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி உள்ளார்.

ஆம்புலன்ஸை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த உதவிக்குப் பின்னால் எந்தவிதமான அரசியல் நோக்கமும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தான் சம்பாதிக்கும் பணத்தை தொடர்ந்து மக்கள் சேவைக்காக மட்டுமே பயன்படுத்தப் போவதாகவும், இந்த ஆம்புலன்ஸை புதுச்சேரி மக்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்” என்றும் உறுதியளித்தார்.

ஏற்கெனவே பல்வேறு கிராமங்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு ஆம்புலன்ஸ்களை வழங்கியிருக்கும் KPY பாலாவின் இந்த மனிதநேய செயல், சமூக வலைதளங்களிலும் புதுச்சேரி மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.