எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் வெளியான விபத்து குறித்த காணொளி ஒன்று பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தக் காணொளியில், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், தனக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த டாடா நானோ காரை முந்திச் செல்ல முயன்றார். மிகவும் அபாயகரமான வளைவில் அதிவேகமாக வந்த அவர், வளைவில் நிலைதடுமாறி சாலையிலிருந்து தூக்கி எறியப்பட்டு கீழே விழுகிறார்.
#VillageRoute 🚨⚠️
Disturbing Visuals 🚨
Motorcycle rider w/o Helmet, overspeeding & #overtaking Tata Nano on #blindcurve, lost control…
– 40kmph Route
– Avoid overtaking on Blind Curves & Speed within Speed Limits.@DriveSmart_IN @dabir @InfraEye
VC WAF pic.twitter.com/ThnVDAsja2— Dave (Road Safety: City & Highways) (@motordave2) December 12, 2025
அப்போது, அவரது மோட்டார் சைக்கிள், சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதி, அதன் உரிமையாளரையும் காயப்படுத்தியது. இந்தக் காணொளி வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்கள் கோபத்தை அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியவர் மீது கருத்துக்களாகப் பதிவிட்டு வருகின்றனர்.
