அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள காட்லின்கர்பர்க் (Gatlinburg, Tennessee) நகரில், ஒரு மிகப் பெரிய கருப்புக் கரடி (Black Bear) பரபரப்பானச் சாலையைக் கடந்து சென்றபோது, வாகனங்கள் நின்று வழிவிட்டன.
இந்தக் காட்சியைக் கண்ட ஒருவர், அந்தக் கரடியின் வாலைத் தொட முயற்சித்ததுடன், அதன் அருகில் செல்ல முயன்றதால் விபரீதம் ஏற்பட இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களின் கடுமையானக் கண்டனத்தைப் பெற்றுள்ளது.
சாலையைக் கடந்து மறுபுறம் சென்ற கரடி, தன்னைப் பின்தொடர்ந்து வந்த நபர் நெருங்கி வந்ததைக் கண்டதும், சட்டென சீறி எழுந்து அவரை நோக்கிப் பாய்ந்தது.
View this post on Instagram
நல்லவேளையாக அந்தக் கரடி முழுவதுமாகத் தாக்கிச் சேதப்படுத்தவில்லை. அந்த நபர் சரியான நேரத்தில்ப் பின்னால் குதித்து, ஆபத்தான தாக்குதலிலிருந்துத் தப்பித்தார்.
“இந்த மனிதன் முட்டாள்தனத்தின் இலக்கணம். இவன் கரடியைக் கொன்றே தீருவான்” என்று இணையவாசிகள் அந்த நபரின் பொறுப்பற்றச் செயலைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
வனவிலங்கு அதிகாரிகளும், காட்டு விலங்குகளிடம் இதுபோன்ற அத்துமீறியச் செயல்களில் ஈடுபடுவது, அவற்றைக் கட்டுப்பாடற்ற நிலைக்குத் தள்ளி, மக்களை அச்சுறுத்தினால் அந்த விலங்கு கொல்லப்படும் நிலை கூட உருவாகலாம் என்று எச்சரித்துள்ளனர்.
