பஞ்சாபின் பரித்கோட் (Faridkot, Punjab) மாவட்டத்தில் உள்ள சைடேக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்களான ராம் சிங் மற்றும் அவரது மனைவி நசீப் கவுர் ஆகியோருக்கு லாட்டரி மூலம் அதிர்ஷ்டம் அடித்தது. ராம் சிங் சமீபத்தில் ரூ.200-க்கு வாங்கிய லாட்டரிச் சீட்டுக்குக் குலுக்கலில் தேர்வு செய்யப்பட்டு, ரூ.1.25 கோடி பரிசுத் தொகையை வென்றார்.
தமக்கு லாட்டரிப் பரிசு விழுந்த செய்தி சுற்று வட்டாரத்தில் பரவினால், யாராவதுத் தங்களைத் தாக்கிப் பணத்தைப் பறித்துக்கொள்வார்கள் என்று ராம் சிங்கும் நசீப் கவுரும் அச்சப்பட்டனர்.
இதனால், யாருக்கும் சொல்லாமல் வீட்டைப் பூட்டி, செல்போனை அணைத்துவிட்டு, கிராமத்தைவிட்டுத் தலைமறைவானார்கள். இந்தச் செய்தி போலீஸாருக்குத் தெரிய வந்ததும், அவர்கள் அந்தத் தம்பதியைத் தொடர்பு கொண்டு, “மக்களின்ப் பாதுகாப்புக்காகவே நாங்கள் இருக்கிறோம், உங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம்” என்று உறுதியளித்தனர். போலீஸாரின் இந்தச் செயலால் தைரியம் அடைந்த ராம் சிங் மற்றும் நசீப் கவுர் தம்பதியினர் மீண்டும் வீடு திரும்பினர்.
