ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் நடந்த ஒரு கொடூரக் கொலைச் சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. முன்னாள் ‘மிஸ் சுவிட்சர்லாந்து’ அழகிப் போட்டியின் இறுதிப் போட்டியாளரான கிறிஸ்தினா ஜோக்சிமோவிக் (Christina Jocksiemovic) என்ற 38 வயதுப் பெண்ணைத், அவரது 43 வயதுக் கணவரே கடந்த 2024 பிப்ரவரி மாதம் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
இந்தக் கொலையை அவர் அரங்கேற்றிய விதம் குறித்து நீதிமன்ற ஆவணங்களில் வெளிவந்துள்ள தகவல்கள் நெஞ்சை உறைய வைக்கின்றன.
கொலைக்குப் பின், அந்தக் கணவர் தனது மனைவியின் உடலை ஒரு மர அறுவை இயந்திரம், கத்தி, மற்றும் தோட்டக் கத்தரிக்கோல் ஆகியவற்றைக் கொண்டு துண்டு துண்டாக வெட்டி உள்ளார்.
மேலும், உடற்பாகங்களின் சில பகுதிகளை மிக்ஸியைப் பயன்படுத்தி மிக நுண்ணியக் கூழாக அரைத்து, பின்னர் அதை ஒரு இரசாயனக் கரைப்பானில் போட்டு அழித்துவிட முயன்றதும் தெரியவந்துள்ளது.
ஆரம்பத்தில் மனைவி திடீரென இறந்துவிட்டதாகவும், பின்னர் தற்காப்பிற்காகவே கொன்றதாகவும் அவர் நாடகமாடினார். ஆனால், உடற்கூறு அறிக்கையில் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதால், அவர் மீது கொலை மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கொலையாளிக்கு ஏற்கனவே வன்முறைப் பழக்கம் உண்டு என்றும், அவர் தற்போதுக் காவல்துறையின் காவலில் இருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
