சமூக வலைத்தளங்களில் ஒரு தம்பதியினரின் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் (National Highway) உள்ள ‘ரெஸ்ட் ஏரியா’வில் (Rest Area) தங்கள் காரை நிறுத்திவிட்டு, கேஸ் ஸ்டவ் அடுப்பை வைத்து சமையல் செய்து, ரொட்டி சுடுவதாகப் பதிவாகியுள்ளது. பொதுப் பாதுகாப்பு மற்றும் குடிமைக் கடமைகள் குறித்துக் கேள்விகளை எழுப்பியுள்ள இந்தச் சம்பவம், இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

நெடுஞ்சாலையில் உணவு சமைப்பது தவறு இல்லை என்றும், யாரையும் தடுக்கவில்லை என்றும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தவில்லை என்றும் அந்தத் தம்பதி வாதிட்டுள்ளனர்.

இருப்பினும், அவர்கள் சமைத்த இடத்தில் காய்கறிச் சக்கைகள் மற்றும் குப்பைகள் சிதறிக் கிடப்பதும், ஒரு சிறு குழந்தை அருகில் விளையாடிக் கொண்டிருப்பதும் வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.

நெடுஞ்சாலை என்பது தனிப்பட்ட இடம் இல்லை என்றும், அங்குச் சமையல் செய்வது விபத்து அபாயத்தை அதிகரிப்பதுடன், மற்றவர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடும் என்றும் மக்கள் விமர்சித்து வருகின்றனர்.

மேலும், கேஸ் சிலிண்டரைத் திறந்து வைத்துக் கூடும்பொது வெளியில் சமைப்பது மிகவும் ஆபத்தானது என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.