இன்றைய நவீன உலகில் செயற்கை நுண்ணறிவு மற்றும் மனிதர்களைப் போன்ற ஹியூமனாய்ட் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வரும் வேளையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரோபோட் ஒன்று திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து விபரீதமாக நடந்துகொண்டிருக்கிறது.
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவின் ஆரம்பத்தில், ஒரு அறையில் இன்ஜினியர்கள் மற்றும் பார்வையாளர்கள் சூழ அனைத்தும் சாதாரணமாக ஒரு டெமோ அல்லது சோதனை நடப்பது போலவே காட்சியளிக்கிறது; ஆனால், அடுத்த சில நொடிகளில் எதிர்பாராதவிதமாகஅந்த ரோபோட்டின் சமநிலை தவறி, தன் முன்னால் நின்ற மனிதர்களை நோக்கி தனது கால்களால் வேகமாக எட்டி உதைக்கத் தொடங்குகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அலறியடித்துக் கொண்டு பின்வாங்கியதோடு, சிலர் தைரியமாகச் சென்று அந்த ரோபோட்டைப் பிடித்துக் கட்டுப்படுத்த முயன்றதால் அங்குச் சிறிது நேரம் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
இந்த வீடியோவை லட்சக்கணக்கான மக்கள் பார்த்துப் பகிர்ந்து வரும் நிலையில், “ரோபோட்டிற்கு ஆபீஸ் ஸ்ட்ரெஸ் அதிகமாகிவிட்டது போல”, “திங்கள் கிழமை மீட்டிங் அதற்குப்பிடிக்கவில்லை” என நெட்டிசன்கள் பலரும் பல நகைச்சுவைச் சினிமா காட்சிகளைப் போலக் கிண்டல் செய்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இருப்பினும், ரோபோட்டிக்ஸ் நிபுணர்கள் இதனை ஒரு பெரிய சவாலாகவே பார்க்கின்றனர்; ஏனெனில், மனிதர்களைப் போல நடப்பதற்கும் சமநிலையைப் பேணுவதற்கும் ரோபோக்களில் எண்ணற்ற சென்சார்கள், மோட்டார்கள் மற்றும் சாப்ட்வேர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், அதில் ஏற்படும் சிறிய சாப்ட்வேர் பக் அல்லது தவறான சென்சார் ரீடிங் கூட மெஷின்களை இப்படி அசுரத்தனமாகக் கட்டுப்பாட்டை இழக்கச் செய்துவிடும் என்றும் அவர்கள் விளக்குகிறார்கள்.
Rogue humanoid robot ATTACKS HUMANS with high kicks pic.twitter.com/FAHLBiQ3Au
— Santosh Misra ‘mohit’ (@Santosh_misraa) July 5, 2026
“>
தொழிற்சாலைகள்,மருத்துவமனைகள் மற்றும் அலுவலகங்களில் எதிர்காலத்தில் இந்த ரோபோக்கள் மனிதர்களுடன் இணைந்து பணியாற்றுவதால், அவருக்கு இன்னும் வலிமையான பாதுகாப்பு அம்சங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை இந்த வைரல் வீடியோ தற்போது உலகிற்கு உணர்த்தியுள்ளது.
