பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தாரின் பேரன் முகமது ரஸா தார், லாகூரில் இரு வெளிநாட்டுப் பெண்களைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் பாகிஸ்தானின் மதிப்பை மொத்தமாகக் காலி செய்துள்ளதால், துணைப் பிரதமர் இஷாக் தார் உடனடியாகத் தனது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என அந்நாட்டில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
வெனிசுலா மற்றும் நெதர்லாந்து நாடுகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட இரு பெண்களும் கடந்த ஜூன் 29 அன்று லாகூரில் வைத்து ரஸா தார் மற்றும் அவரது கூட்டாளிகளால் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் கூட்டாளிகளாக இருந்த இந்த வெளிநாட்டுப் பெண்களை, பிசினஸ் விசா கொடுத்து ரஸா தார் பாகிஸ்தானுக்கு வரவழைத்துள்ளார். ஜூன் 29 அன்று லாகூர் வந்த அப்பெண்களைக் கடத்திச் சென்று இந்த விசுவரூபக் கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட நெதர்லாந்து பெண்ணின் தந்தை அளித்த அவசர புகாரின் பேரில், ரஸா தார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அமெரிக்கா-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் சார்பில் பங்கேற்கும் உயர்மட்டத் தலைவரான இஷாக் தாரின் சொந்த பேரன், அதுவும் ஈரானிய முன்னாள் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கிற்குப் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் இஷாக் தார் சென்றிருந்த அதே நேரத்தில் இந்த வழக்கில் கைதாகி இருப்பது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
