மும்பையில் 10 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு, ஒரு நபர் 1 ஒரு அறை, சமையலறை, வீட்டிலிருந்து 1 ஒரு படுக்கையறை, ஹால், சமையலறை வீட்டிற்கு மாறிய மகிழ்ச்சியான தருணம், எதிர்பாராத ஒரு பெரிய ஏமாற்றத்தில் முடிந்துள்ளது.

இதுகுறித்து அவர் வாடகைக்கு எடுத்த புதிய வீட்டின் படுக்கையறைச் சுவரில் இருந்து தண்ணீர் அருவி போல கொட்டும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். “இவ்வளவு பெரிய போராட்டத்திற்குப் பிறகு புதிய வீட்டிற்கு மாறினாலும், படுக்கையறையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், நான் இன்னும் பழைய 1RK வீட்டில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்று அவர் வேதனையுடனும் கிண்டலாகவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

“>

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் மும்பையின் அநியாய வாடகை மற்றும் மோசமான வீடுகளின் தரம் குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர். “கடின உழைப்பிற்குப் பிறகு நீங்கள் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்துவிட்டீர்கள்” என்றும், “இதைப் பார்த்து சிரிப்பதா அல்லது அழுவதா என்றே தெரியவில்லை” என்றும் நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து, அந்த நபரின் சூழ்நிலைக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.