பாம்புகளைக் கண்டாலே அலறி ஓடுபவர்கள் மத்தியில், ஒரு நபர் 5-6 பாம்புகளை ஒரே நேரத்தில் கையில் பிடித்துக்கொண்டு, அவற்றைக் கடிக்க விட்டாலும் கவலைப்படாமல் இருக்கும் அதிர்ச்சியான வீடியோ ஒன்றுச் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ‘
The Real Tarzann’ என்று அழைக்கப்படும் அந்த நபர், பாம்புகளைக் ‘கயிறு’ போலத் தூக்கிக் கையாள்வதைப் பார்த்து இணையவாசிகள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
View this post on Instagram
அந்த வீடியோவில், அந்த நபர் பிடித்து வைத்திருக்கும்ப் பாம்புகள் அவரது மற்றொரு கையில் கடிப்பது தெளிவாகத் தெரிகிறது. வலி தெரிந்தும் அவர் பாம்புகளை விடவில்லை.
தன் மீது பாம்பு விஷம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது போல அவர் செயல்படுகிறார். இவர் பிடித்திருக்கும் பாம்புகள் லேசான விஷத்தன்மை கொண்ட ‘மாங்கரோவ்’ (Mangrove) வகையைச் சேர்ந்தவை என்று அவர் கூறியுள்ளார்.
இந்த அதிர்ச்சி வீடியோ இன்ஸ்டாகிராமில் (therealtarzann) பகிரப்பட்டு, இதுவரை 8 லட்சத்திற்கும் அதிகமானப் பார்வைகளைக் கடந்துள்ளது. பலரும் இவரை ‘ரியல் டார்சன்’ மற்றும் ‘நாகலோகத்தைச் சேர்ந்தவர்’ என்று கேலி செய்து வருகின்றனர்.
