கோவிட்-19 (Covid-19) கிருமியானது சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் (Wuhan Lab) உருவாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி, 2020-ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்ற சீன வைராலஜிஸ்ட் லி-மெங் யான் (Li-Meng Yan), தற்போதுப் பீதியடைந்துள்ளார்.

தன்னை மீண்டும் சீனாவுக்கு வரவழைக்க, தனதுக் குடும்ப உறுப்பினர்களை (பெற்றோர் மற்றும் கணவர்) சீன அரசுப் பயன்படுத்திக் கொள்வதாக அஞ்சுவதாக அவர் அமெரிக்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

“கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, கம்யூனிஸ்ட் கட்சி (CCP) எனதுப் பெற்றோரையும், கணவரையும் பயன்படுத்தி, வைரஸ் குறித்த உண்மையை அழிக்க என்னை மீண்டும் வரவழைக்க முயற்சிக்கிறது” என்று லி-மெங் யான் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கிடையில், இலங்கையைச் சேர்ந்த அவரது கணவரும் வைராலஜிஸ்டுமான ரனவாகா பெரேரா (Ranawaka Perera), 2020-ஆம் ஆண்டு அவர் வீட்டை விட்டுச் சென்றதிலிருந்து பேசவில்லை என்றும், “அவள் பாதுகாப்பாக இருக்கிறாளா என்பதை உறுதிப்படுத்த, ஒருமுறையாவது அவளிடம் பேச விரும்புகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

தன்னைச் சில செல்வாக்கு மிக்கவர்கள் மூளைச் சலவை செய்துவிட்டதாகக் கணவர் கூறினாலும், லி-மெங் யான் தனதுக் குடும்பத்தாரைத் தொடர்பு கொள்ளாமல் மறைந்துள்ளார்.