தி.மு.க. தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ என்ற தலைப்பில் காணொலி மூலம் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர், தமிழ்நாட்டின் ஆட்சி மீண்டும் தி.மு.க.வின் கைக்கே வரும் என உறுதியளித்தார்.

எத்தனை எதிர்க் கட்சிகள் திரண்டாலும், எத்தனை கூட்டணிகள் அமைந்தாலும், இரண்டரை கோடி வாக்குகளைப் பெற்று தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.மேலும், தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைக் காக்க, பசி, உறக்கம், குடும்பம் ஆகியவற்றையும் விட்டுவிட்டு எஸ்.ஐ.ஆர். பணிகளில் ஈடுபட்டு வரும் கட்சி உறுப்பினர்களுக்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கட்சியின் கட்டமைப்பைத் துல்லியமாகப் பயன்படுத்துவதே நமது முக்கிய உத்தி என்றும் அவர் வலியுறுத்தினார்.