பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தின் கோஹண்டா கிராமத்தைச் சேர்ந்த ரீனா தேவி (45) என்ற பெண், தனது வளர்ப்பு மகளின் காதல் திருமணம் மற்றும் அவர் பேசிய மிகக் கடுமையான வார்த்தைகளால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நெஞ்சைப் பதறவைக்கும் சோகச் சம்பவம் தற்பொழுது சோசியல் மீடியாக்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரீனா தேவியின் கணவர் மோகன் குமார் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தின்படி, அவரது முதல் மனைவி கடந்த 2002-ஆம் ஆண்டு பிரசவத்தின் போது உயிரிழந்ததை அடுத்து, குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர் ரீனா தேவியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
முதல் மனைவிக்கு பிறந்த 20 வயது மகள் பூஜா குமாரி, கல்லூரிப் படிப்பைப் படித்துக் கொண்டிருந்த வேளையில், கடந்த மே 29 அன்று தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடித் திருமணம் செய்து கொண்டுள்ளார். மகள் எடுத்த இந்த அதிரடி முடிவால் ரீனா தேவி ஏற்கனவே மிகுந்த கவலையில் இருந்த சூழலில், காதலனுடன் சென்ற மகளைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தாயும் தந்தையும் சமாதானம் செய்ய முயன்றுள்ளனர்.
அப்போது வளர்ப்பு மகள் பூஜா குமாரி, தனது மாற்றாந்தாய் ரீனா தேவியைப் பார்த்து, “என் வாழ்க்கையில் என்னை நேசிக்கும் காதலன் தான் முதலில் வந்தான்; நீங்களெல்லாம் எனக்குப் பிறகுதான் வந்தீர்கள்!” என்று மிகத் திமிராகப் டொக்கென்று முகத்தில் அடித்தாற்போல் பதிலளித்துள்ளார்.
மகளின் இந்த கடுமையான நடத்தை மற்றும் அவமதிப்பால் மிகக் கொடூரமாகப் பாதிக்கப்பட்ட ரீனா தேவி, மன வேதனையில் வீட்டில் இருந்த விஷத்தைக் குடித்துள்ளார். உடனடியாக அவர் அமர்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காகப் பாகல்பூரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
“பெற்றவளை விடப் பிறந்த சில மாதக் காதல்தான் பெருசுன்னு நினைச்ச மகளோட பேச்சால் ஒரு உயிர் போயிடுச்சே பாஸ்!” என்று இந்தச் சோகச் செய்தி தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாக்களில் காட்டுத்தீயாய் பரவி நெட்டிசன்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
