உறவுகளில் துரோகம் இழைப்பது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும், சிலர் அதிலிருந்து விலகுவதில்லை. கணவன் மனைவிக்கு துரோகம் செய்யும்போது அது மூன்று பேரின் வாழ்க்கையைப் பாதிக்கும் என்ற உண்மையைப் பலர் உணர்வதில்லை. சமீபத்தில் சீனாவில் இருந்து வெளியாகியுள்ள ஒரு காணொளி, இதுபோன்ற துரோகத்தின் விளைவுகள் எவ்வளவு அபாயகரமானதாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Lindaikejiblog (@lindaikejiblogofficial)

தகவல்களின்படி, தனது கள்ளக்காதலியுடன் தனிமையில் இருந்த ஒரு திருமணமான ஆணின் வீட்டிற்கு திடீரென அவரது மனைவி வந்துள்ளார். மனைவியைப் பார்த்ததும் பயத்தில் அந்தப் பெண்மணி, குடியிருப்பு கட்டிடத்தின் 10வது மாடியில் உள்ள பால்கனியில் இருந்து கீழே தொங்கியுள்ளார். அவர் தவறி விழுந்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம்.

அத்துடன் கணவன்-மனைவி உறவிலும் விரிசல் ஏற்பட்டிருக்கும். இந்த திகிலூட்டும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் அந்தக் காணொளியில், வெள்ளை ஆடை அணிந்த அந்தப் பெண்மணி, மிக இடுக்கமான ஜன்னலின் விளிம்பில் மெதுவாக நடந்து செல்வது தெரிகிறது. அவருக்குக் கீழே ஆழமான பகுதி உள்ளது.

ஜன்னலுக்கு உள்ளே சட்டை அணியாமல் இருக்கும் அவரது கள்ளக்காதலர், அவரிடம் ஏதோ சொல்லிவிட்டு மறைந்துவிடுகிறார். அந்தப் பெண் தன் கையில் அலைபேசியை வைத்துக்கொண்டே, குழாய்கள் மற்றும் ஜன்னல்களின் உதவியுடன் 10வது மாடியில் இருந்து 9வது மாடிக்கு இறங்க முயற்சிக்கிறார்.

ஒரு கட்டத்தில் அவர் முழுவதுமாக ஒரு குழாயைப் பிடித்தபடி சமநிலை காத்துக்கொண்டு, அருகிலுள்ள ஜன்னலைத் தட்டி அழைப்பதும் காணொளியில் பதிவாகியுள்ளது. இந்த காணொளி அபாயகரமான காட்சி மட்டுமல்லாமல், உறவுகளில் துரோகத்தின் கடுமையான விளைவுகளுக்கான ஒரு எச்சரிக்கையாகவும் கருதப்படுகிறது. இந்தச் சம்பவம், நம்பிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.