கர்நாடக மாநிலம் பெலகாவி (Belagavi) மாவட்டத்தில் உள்ள முரகோடா (Muragoda) காவல் நிலைய எல்லைக்குட்பட்டப் பகுதியில், 13 வயதுச் சிறுமியைப் பிடித்து கரும்புத் தோட்டத்திற்குள் இழுத்துச் சென்றுப் பாலியல் வன்கொடுமை செய்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக மணிகண்டா தின்னிமணி மற்றும் இரன்னா சங்கம்மனாவர் ஆகிய இரண்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏழாம் வகுப்புப் படித்து வரும் இந்தச் சிறுமி, மாவு மில்லில் இருந்து வீட்டிற்குத் திரும்பும் போது, அவரது வீட்டிலிருந்து 300 மீட்டர் தொலைவிலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
குற்றவாளிகள் பாதிக்கப்பட்டச் சிறுமியின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்ததால், சம்பவம் குறித்தத் தகவல் தாமதமாகவே போலீசாருக்குத் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக திங்கள்கிழமை (டிசம்பர் 1) புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து உடனடியாகக் குற்றவாளிகளைக் கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்தில், ஒருவன் குற்றத்தைச் செய்ததாகவும், மற்றொருவன் அதற்குத் துணையாக நின்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டச் சிறுமிக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என்றுப் பெலகாவி எஸ்.பி. உறுதி அளித்துள்ளார்.
