இந்தியாவில்ச் சுற்றுலாச் சென்ற அலெக்ஸ் என்ற இளைஞர், நாகாலாந்தில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘ஹார்ன்பில் திருவிழா’வின் (Hornbill Festival) ஒரு உணவகத்தின் உணவுப் பட்டியலை (Menu)ப் பார்த்துப் பெரும் அதிர்ச்சியில் உறைந்தார்.

தொடக்கத்தில், பட்டர் சிக்கன், தால் மக்கானி போன்ற சாதாரண இந்திய உணவுகள் இருந்த நிலையில், சிறிது நேரத்தில் அந்தப் பட்டியல் எதிர்பாராத விதமாக மாறியது.

 

View this post on Instagram

 

A post shared by Alex Wanders (@alexwandersyt)

உணவுப் பட்டியலின் கீழ் வரிசைகளைக் கண்ட அலெக்ஸ், பட்டுப்புழுக்கள் (Silkworm larvae), நத்தைகள் (Snails), வெட்டுக்கிளிகள் (Grasshoppers), சிலந்திகள் (Spiders), முள்ளம்பன்றித் தோல் மற்றும் கடைசியாக பூனை இறைச்சி (Cat Meat) போன்ற வினோதமான உணவுகளைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.

“பூனையை யார் சாப்பிடுவது?” என்று வேடிக்கையாகக் கேள்வி எழுப்பினார். பார்ப்பதற்கு வினோதமாக இருந்தாலும், இத்தகையப் பூச்சிகளும் விலங்குகளும் நாகாலாந்து மற்றும் வடகிழக்குப் பழங்குடிச் சமூகங்களின் நீண்டகால உணவுப் பாரம்பரியத்தின் (Culinary Traditions) ஒரு பகுதியாகும். இந்த உணவுகள் புரதச் சத்து நிறைந்ததாகவும், கலாச்சார ரீதியாக வேரூன்றியதாகவும் கருதப்படுகின்றன.