ஆண்டுக்கு $2 முதல் $3 மில்லியன் வரை சம்பாதிக்கும் ஒரு உயர் அதிகாரி, நன்றி தெரிவிக்கும் விடுமுறையன்று (Thanksgiving) அலுவலகக் கிச்சனில் இருந்து சோடா கேன்களைத் திருடிச் சென்ற சம்பவம், பணியிட ஒழுக்கம் (Workplace Ethics) குறித்துப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உடற்பயிற்சி செய்யச் சென்ற ஒரு ஊழியர், அந்த இயக்குநர் தன்னுடைய காரில் அலுவலகச் சோடாக்களை ஏற்றிக்கொண்டிருந்ததைக் கவனித்துள்ளார்.

மறுநாள், அந்த இயக்குநர் தனது விருந்தின் படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் இருந்த சோடா கேன்கள் அனைத்தும், அவர்கள் அலுவலகத்தில் இருக்கும் தனித்துவமான பிராண்டுகளாகவே இருந்துள்ளன.

இவ்வளவு பணம் சம்பாதிக்கும் ஒருவர், சில டாலர் பானங்களுக்காக ஏன் தனது வேலை மற்றும் நற்பெயருக்கு ஆபத்தை விளைவிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

“அலுவலகத்தில் இருந்துப் பொருட்களை எடுப்பது சாதாரணமானது” என்றுச் சிலர் கருத்துத் தெரிவித்தாலும், மற்றவர்கள் “பணக்காரர்கள் ஏழைகளாக நடிப்பதால்தான் பணக்காரர்களாகவே இருக்கிறார்கள்” என்று கூறி விமர்சித்துள்ளனர்.