இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின்போது தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரெவிஸின் விக்கெட்டை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா, ஆக்ரோஷமாக அவரை முறைத்தபடி வெளியே செல்லுமாறு கைகாட்டி சைகை செய்தார்.
🚨Harshit Rana receives a reprimand from ICC for send off🚨
This is for an incident involving South Africa batter Dewald Brevis.#IndianCricket #Raipur pic.twitter.com/zDjXm2eaVB
— alekhaNikun (@nikun28) December 3, 2025
“>
இந்தச் செயல் ஐசிசி-யின் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று கண்டனம் தெரிவித்த ஐசிசி, விதிகளை மீறியதற்காக ராணாவுக்கு ஒரு டிமெரிட் புள்ளியை (Demerit point) விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. கிரிக்கெட் போட்டியின்போது எதிரணி வீரரை நோக்கி ஆக்ரோஷமான சைகைகள் காட்டுவது ஐசிசி-யின் விதிகளுக்கு எதிரானது என்பதால், அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
