வங்கக் கடலில் வலுப்பெற்ற ‘டிட்வா’ புயல், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவே சென்னை – மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நேற்று (டிச. 1) முதல் சென்னையில் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாகத் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், மழைநீர் வெள்ளம் போல சூழ்ந்துவிடும் என்ற அச்சத்தால் மக்கள் தங்களது கார்களைப் பாதுகாப்புக் கருதி, வேளச்சேரி, ராயபுரம் மற்றும் கோடம்பாக்கம் ஆகிய முக்கிய மேம்பாலங்களில் வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனால் அப்பாலங்களில் கார்கள் வரிசைகட்டி நின்றுகொண்டிருக்கின்றன. இன்றும் வட மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளதுடன், பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.