டெல்லியில் உள்ள கிருஷ்ணா நகரில் இருக்கும் கோயல் மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு வயது முதிர்ந்த பெண்மணி உயிரிழந்தார். சிகிச்சை முடிந்து சடலத்தை உறவினர்கள் எடுத்துச் செல்லும்போது, அந்தப் பெண்ணின் தங்க நகைகள் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து நவம்பர் 12 அன்று குடும்பத்தினர் புகார் அளித்தாலும், ஆரம்பத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் தாமதம் செய்தது. சிசிடிவி காட்சிகளைச் சோதனையிட்டபோது, மருத்துவமனை ஊழியர் ஒருவர் இறந்த பெண்ணின் நகைகளை அகற்றுவது பதிவானது.

“>

 

இதையடுத்து, தற்போது இந்த வழக்கில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், திருட்டில் ஈடுபட்ட அந்தப் பெண் ஊழியரை மருத்துவமனை நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது.