மத்தியப் பிரதேச மாநிலம் போபால் ரயில் நிலையத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. கீழ்நோக்கி இயக்கப்படும் மின் படிக்கட்டில் (எஸ்கலேட்டர்) சில பயணிகள், மேல்நோக்கி ஏற முயன்ற வீடியோதான் இப்போது வைரலாகியுள்ளது.

கீழே இறங்குவதற்காக இயங்கும் படிக்கட்டில் அவர்கள் கடினமாக முயற்சி செய்து ஏறும் காட்சி, காண்போரை நகைச்சுவை கொள்ள வைக்கிறது. சில நிமிடங்கள் போராடிய பின்னும் அவர்களால் மேலே செல்ல முடியவில்லை. இதைப் பார்த்த மற்றவர்களும் பின்வாங்கினர். இருப்பினும், சில பயணிகள் தொடர்ந்து முயற்சி செய்தனர். இறுதியாக, படிக்கட்டில் கீழே வந்த மற்ற பயணிகளின் கூட்டத்துடன் அவர்களும் கீழே வந்து சேர்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by नमस्ते विदिशा | k.k.patel (@namaste_vidisha)

“>

இந்த வீடியோவை ஒருவர் @namaste_vidisha என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, “சில நிமிட வேலையை பல மணி நேரமாக்குவது” என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த அசாத்திய முயற்சிக்கு பயனர்கள் அளித்த வேடிக்கையான கமெண்ட்டுகள், இந்தச் சம்பவத்தை இன்னும் கலகலப்பாக்கியுள்ளன.