தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சில இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தொடர்ந்து மழை பாதிப்புகளை கண்காணித்து வரும் நிலையில் நிவாரண முகாம்கள் மூலம் பொது மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி நாளை சென்னை மாவட்டத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை முதலே தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நாளை அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு வழங்கியுள்ளனர்.
