நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்திற்கு முதன்முறையாக குடியரசு துணை தலைவராக பொறுப்பேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுள்ளார். இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேட்டி கொடுத்தார். அவர் பேசியதாவது, இந்தியா எப்போதும் ஜனநாயகத்தை போற்றும் நாடு.
நாம் அனைவரது நோக்கமும் தேசத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வது மட்டும்தான். முதல் முறை எம்பியாக பொறுப்பேற்றவர்கள் மற்றும் இளம் எம்பிக்கள் அதிகமாக பேச வேண்டும். அதாவது முதல்முறையாக எம்பி யாக தேர்வு செய்யப்பட்டவர்கள் மற்றும் இளம் எம்பிகளுக்கு அவர்கள் தொகுதியில் உள்ள பிரச்சனைகள் குறித்துப் பேசவோ அல்லது திறமையை நிரூபிக்கவோ வாய்ப்பு கொடுக்கவில்லை என அவர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். இளம் தலைமுறையினருக்கு நாம் வாய்ப்பு கொடுப்பதிலிருந்து அவர்கள் அனுபவத்தின் மூலம் நாடு வளர்ச்சி அடையும். இதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
மேலும் பீகார் சட்டமன்றத் தேர்தல் தோல்வியை மனதில் வைத்துக்கொண்டு எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளி செய்யக்கூடாது என்றும் கூட்டம் அமைதியாக நடைபெற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
