தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தற்போதே தயார் நிலையில் இருக்கும் நிலையில் புதிய உறுப்பினர்களை தங்கள் கட்சியில் சேர்ப்பது மற்றும் மாற்றுக் கட்சியில் இருப்பவர்களை தங்கள் கட்சியில் இணைப்பது உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது கிருஷ்ணகிரியில் அதிமுகவில் இருந்து விலகிய இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்போது திமுகவில் இணைந்துள்ளனர்.

கடந்த மாதம் 13ஆம் தேதி அதிமுகவின் முன்னாள் ஓசூர் கிழக்கு மண்டல குழு தலைவர் புருஷோத்தம ரெட்டி திமுகவில் இணைந்தார். அவரது முன்னிலையில் தற்போது அதிமுகவிலிருந்து விலகிய 2000 பேர் திமுகவில் அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் இணைந்தனர். மேலும் கே.பி முனுசாமி  மீது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை குறி வைத்து திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.