அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில்  இணைந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தவெக தலைவர் விஜய் முன்னிலையில் பேசும்போது, தனது சட்டைப் பையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்திருந்தார். இந்தச் செயல், அதிமுகவின்  மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கோட்டையனின் இந்தச் செயலைக் கண்டித்து, சிவகங்கை மாவட்ட அதிமுகவினர் மானாமதுரையில் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அந்தப் போஸ்டரில், “அதிமுக வேண்டாம் என்று போன பிறகு  எம்.ஜி.ஆர்., அம்மா (ஜெயலலிதா) புகைப்படம் எதற்கு, சூடு, சொரணை இருந்தால் அதை பயன்படுத்தாதே” என்று நேரடியாகச் செங்கோட்டையனைக் கண்டித்து வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அதிமுகவை விட்டு விலகிய பிறகும் ஜெயலலிதாவின் புகைப்படத்தைப் பயன்படுத்திய செங்கோட்டையனின் செயல், அதிமுகவினரின் நேரடித் தாக்குதலுக்கு வழிவகுத்துள்ளது.