தவெக தலைவர் விஜய், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் ஒரு புதிய வியூகத்தை வகுக்க அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்தின்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் தவெகவினருக்கு 40 விழுக்காடும், துறை சார்ந்த ஆளுமைகள், சமூகப் பிரபலங்கள் உள்ளிட்டவர்களுக்கு 60 விழுக்காடு தொகுதிகளையும் ஒதுக்கீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் திட்டத்தின் மூலம், கட்சியில் உறுப்பினர்களாக இல்லாத வெளியிலுள்ள பிரபலமான நபர்களையும், மக்கள் மத்தியில் செல்வாக்கு கொண்ட ஆளுமைகளையும் வேட்பாளர்களாகக் களமிறக்க விஜய் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. கட்சியில் உள்ளோரைத் தவிர, வெளிநபர்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கும் விஜயின் இந்த முடிவு, தேர்தலில் புதிய வாக்காளர்களைக் கவர்ந்து, தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவும், ஆட்சியைப் பிடிக்கவும் அவர் எடுத்துள்ள சாமர்த்தியமான அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
