அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சரும் மூத்த அரசியல்வாதியுமான செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகத்தில் விஜய் முன்னிலையில் இணைந்தது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கிட்டத்தட்ட 50 வருடங்களாக அவர் அரசியலில் இருக்கும் நிலையில் தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்தவர் என்ற பெருமையை பெற்றவர். அவருடன் முன்னாள் எம்பி சத்திய பாமா உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகளும் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தனர். இதைத்தொடர்ந்து இன்னும் சில அதிமுக தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக செய்திகள் வெளிவரும் நிலையில் இது தொடர்பாக தற்போது நாஞ்சில் சம்பத் பேசியுள்ளார்.
அவர் இன்னும் அதிமுகவில் இருந்து பலர் பிரிந்து சென்று தமிழக வெற்றி கழகத்தில் இணைவார்கள் என்றும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அடுத்து வரும் தேர்தலில் 4 தொகுதிகளில் வெற்றி பெறுவதே மிகவும் கடினம் என்றும் கூறியுள்ளார். மேலும் ஒரு பேட்டியில் நாஞ்சில் சம்பத் விஜய்யின் செல்வாக்கை உதயநிதி ஸ்டாலினால் ஜீரணிக்க முடியவில்லை என்றும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் விஜய் அழைத்தால் கண்டிப்பாக தமிழக வெற்றி கழகத்தில் நின்று நான் பணியாற்றுவேன் என்றும் அரசியல் விமர்சகர் நாஞ்சில் சம்பத் கூறியது குறிப்பிடத்தக்கது.
