தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம், கட்டமீதி கங்காரம் கிராமத்தைச் சேர்ந்த கஞ்சி மல்லம்மா – சாயப்பா தம்பதியின் இளைய மகள் சிரிஷா (21). இவருக்கும், நல்லமோனி கூடத்தைச் சேர்ந்த சிவலிங்கத்திற்கும் ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

சமைக்கத் தெரியவில்லை, தன்னை விடக் குறைவாகப் படித்திருக்கிறார் எனக் கூறி சிவலிங்கம், சிரிஷாவைக் கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 25-ம் தேதி இருவருக்கும் ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து சிரிஷாவை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றுவிட்டார் சிவலிங்கம்.
இதனால்மனமுடைந்த சிரிஷா, கணவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, “நீ எனக்கு அவசியமில்லை” என்று சிவலிங்கம் திட்டியதாகத் தெரிகிறது.

மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சிரிஷா வீட்டில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.