ராஜஸ்தானின் ஆல்வார் பகுதியில், ஜெய் கிஷன் என்ற போலீஸ்காரர் தனது முதல் மனைவியைத் விவாகரத்து செய்யாமல், இரண்டாவது திருமணம் செய்ய முயன்றபோது, திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ​இரண்டு குழந்தைகளுடன் ஹோட்டலுக்கு வந்த முதல் மனைவி ரீனா, திருமணத்தை நிறுத்தினார்.

ரீனாவைக் கண்ட போலீஸ்காரர் ஜெய் கிஷன் குழப்பத்தில் குளியலறைக்குள் ஒளிந்து கொண்டார். 2011-இல் திருமணம் செய்த இவர்கள், எட்டு ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்கின்றனர். ரீனா தனியாகக் குழந்தைகளை வளர்க்கிறார். தகவலின் பேரில் அங்கு வந்த போலீஸார், திருமணத்தை நிறுத்திவிட்டு, குற்றஞ்சாட்டப்பட்ட போலீஸ்காரர் மற்றும் திருமணம் செய்ய இருந்த பெண் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.