வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகத் தமிழகத்தில் மழைப்பொழிவு தீவிரம் அடைந்துள்ளது.

இந்தச் சூழலில், இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை (நவ. 28) நான்கு மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுத்து அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களிலும் நாளை அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பொதுமக்களும், குறிப்பாகக் கடலோரப் பகுதி மக்களும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தால், மழை மற்றும் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கக்கூடும்.