தமிழக வெற்றி கழகத்தில் சற்றுமுன் செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் இணைந்தார். எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அரசியலில் இருக்கும் செங்கோட்டையன் கலைஞர் கருணாநிதி மற்றும் அமைச்சர் துரைமுருகனுக்கு அடுத்தபடியாக அதிக முறை எம்எல்ஏவாக இருந்தவர் என்ற பெருமையை பெற்றவர். சமீபத்தில் செங்கோட்டையனை எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிலிருந்து நீக்கினார்.
இந்த நிலையில் 50 வருடம் அனுபவம் உள்ள செங்கோட்டையனை நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தில் சேர்த்தது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் நிலையில் விஜய் செங்கோட்டையனை வரவேற்று வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
— TVK Vijay (@TVKVijayHQ) November 27, 2025
“>
அந்த வீடியோவில் 20 வயது இளைஞராக இருக்கும் போது எம்ஜிஆரை நம்பி அதிமுகவில் சேர்ந்து சிறிய வயதில் எம்எல்ஏவாக உயர்ந்தவர். அந்த இயக்கத்தின் இருவரும் தலைவர்களின் நம்பிக்கைக்குரிய ஒருவராக இருந்தார். 50 வருட அரசியலில் இருக்கும் செங்கோட்டையனின் அனுபவமும் அவருடன் இருப்பவர்களின் அனுபவமும் நமக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் அவர்கள் அனைவரையும் கட்சி சார்பாக வரவேற்கிறேன் என்றும் கூறினார்.
