அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான கே.ஏ. செங்கோட்டையன், இன்று (நவ. 27) அதிகாரப்பூர்வமாக நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில்  இணைந்தது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இணைப்பு குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம்  செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

“>

 

செங்கோட்டையனின் இந்த இணைப்பு குறித்துப் பதிலளிப்பதைத் தவிர்த்த எடப்பாடி பழனிசாமி, “அதைப் பற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள். அவரிடமே சென்று கேளுங்கள்” என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, செங்கோட்டையன் திமுகவின் ‘B டீம்’ என்று பழனிசாமி சமீபத்தில் மறைமுகமாகக் விமர்சித்திருந்தார். செங்கோட்டையனின் இந்த அதிரடி அரசியல் நகர்வு குறித்து எடப்பாடி பழனிசாமி மௌனம் காத்தது, அதிமுக வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.