செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் தற்போது வேகமாகப் பரவி வரும் ஒரு வீடியோ, பார்வையாளர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு எரிமலையிலிருந்து கொதிக்கும் லாவா தெருக்களில் ஆறுபோல் பாய்வது போலச் சித்தரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, ஒரு எரிமலை வெடிக்கும்போது அதன் லாவா மிகவும் சூடாக இருப்பதால், அது சில நொடிகளில் எவரையும் உருக்கிவிடும் அபாயம் உள்ளது.
ஆனால், இந்த வீடியோவின் மிகவும் ஆச்சரியமான அம்சம் என்னவென்றால், அங்குள்ள மக்கள் லாவாவை பொருட்படுத்தாமல், சாதாரண தண்ணீரில் நடப்பது போல அலட்சியமாக சுற்றித் திரிகின்றனர். தெருக்கள் முழுவதும் எரிமலை லாவா நிரம்பி, கார்கள் சிக்கித் தவிக்கும் இந்த பயங்கரமான காட்சியைக் கண்டு, இது உண்மை என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. இந்தச் சம்பவம் நிஜம் அல்ல, மாறாக இது ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் கற்பனையாக உருவாக்கப்பட்டது ஆகும்.
View this post on Instagram
பார்ப்பவர்களுக்கு இது உண்மை போலவே தோன்றும்படி, தத்ரூபமாக ஏஐ மூலம் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை 8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளதுடன், பலரும் இது ஒரு ஏஐ உருவாக்கம் தான் என்பதைச் சுட்டிக்காட்டி கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மக்கள் அலட்சியமாக லாவாவில் நடப்பது போன்ற காட்சிகள், நிஜ வாழ்க்கைக்கு முரணாக இருப்பதால், இது ஏஐ தான் என்று பலரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
