அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான கே.ஏ. செங்கோட்டையன், இன்று (நவ. 27) தனது ஆதரவாளர்களுடன் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறார்.
அதிமுகவில் பிளவுபட்ட அணிகளை ஒன்றிணைக்க வலியுறுத்திய காரணங்களுக்காக, எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட செங்கோட்டையன், நேற்று தனது சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

செங்கோட்டையனின் இந்த இணைப்பு நிகழ்வு, தமிழக வெற்றிக் கழகத்திற்கு அரசியல் களத்தில் மேலும் பலத்தைச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவின் முன்னாள் எம்.பி.யான சத்தியபாமா, அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தின் முன்னாள் பொருளாளர் கந்தவேல் முருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் இன்று தவெகவில் இணைய உள்ளனர். இந்த இணைப்புகள், தவெகவின் அரசியல் நகர்வுக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
