மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், அதிமுகவின் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் அக்கட்சியிலிருந்து விலகியிருப்பது, எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவுக்கும் பின்னடைவாக அமையும் என்று தெரிவித்தார்.

மேலும், செங்கோட்டையனின் இந்த முடிவு அரசியல் களத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், “அவரது முடிவின் பின்னணியில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் கைகள் நீண்டு இருக்குமா? என்ற கேள்வி எழுகிறது” என்று அவர் சந்தேகம் எழுப்பினார்.

ஏற்கெனவே பாஜகவினர் தன்னை டெல்லிக்கு அழைத்தார்கள் என செங்கோட்டையனே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதிமுகவை பலவீனப்படுத்தும் விதமாக பாஜக செயல்படுவது, தமிழக அரசியலுக்கும் நல்லதல்ல என்றும் திருமாவளவன் விமர்சித்துள்ளார். .