ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள அனல் மின் நிலையத்தில் (Power Plant), நந்து சிங் என்ற ஊழியரை ஒரு பெரிய மலைப்பாம்பு தாக்கியது. பம்ப் ஹவுஸ் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென அந்தப் பாம்பு அவரது காலை இறுக்கிப் பிடித்துக்கொண்டது. சுமார் 10 நிமிடங்களுக்குப் பாம்பு அவரை விடவில்லை. நந்து சிங் கூச்சலிட்டதை அடுத்து, சக ஊழியர்கள் தடிகளால் பாம்பை அடித்து, அவரைக் காப்பாற்றினர்.
कोटा थर्मल प्लांट में अजगर ने श्रमिक पर हमला कर पैर जकड़ा, कर्मचारियों ने बचाया, गनीमत रही कि मामूली चोटें आईं#viralvideo | #Kota | #Rajasthan pic.twitter.com/IKwf0RJ3Fk
— NDTV Rajasthan (@NDTV_Rajasthan) November 24, 2025
“>
அவருக்குச் சிறிய காயங்கள் ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்தப் பெரிய பாம்பு தாக்கியதில் தொழிலாளர்கள் அனைவரும் பயந்துபோயுள்ளனர். இதில் கோபப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், சிலர் அவரைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக, இந்தச் சம்பவத்தை காணொளி எடுத்துக்கொண்டிருந்தனர் என்று நந்து சிங்கின் குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்தனர்.
