அசாம் மாநிலம், கவுகாத்தியில் (Guwahati) நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ரசிகர்கள் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு (Gautam Gambhir) எதிராக “கௌதம் கம்பீர் ஹாய் ஹாய்” என்று கோஷமிட்டு அவதூறு (Slander) செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்பீர் பொறுப்பேற்றதில் இருந்து, டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் ஆதிக்கம் சரிந்துள்ளது என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.
இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து பல தோல்விகளைச் சந்தித்து வருவதற்கும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருந்து நீங்கியதற்கும் கம்பீரே காரணம் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.
🚨: Angry Fans chanted “Gautam Gambhir Hay Hay” in front of Gautam Gambhir after India’s embarrassing Test series loss at Guwahati stadium. pic.twitter.com/7gq4T1lq8j
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) November 26, 2025
கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற சிறிது காலத்திலேயே, ஜாம்பவான் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதற்குக் காரணமும் அவர்தான் என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கவுகாத்தியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்ததால் கோபமடைந்த ரசிகர்கள், மைதானத்தில் கம்பீருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி தங்கள் வெறுப்பை வெளிப்படுத்தினர்.
