இந்தியத் திருமணங்களில் மணமக்களின் “பிரமாண்டமான நுழைவு” (Grand Entry) என்பது இப்போது ஒரு பெரிய பழக்கமாக மாறிவிட்டது. தங்கள் திருமணம் வித்தியாசமாகவும் நினைவில் இருக்கும்படியும் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஜோடியும் விரும்புகிறது. ஆனால், இப்படிப்பட்ட முயற்சிகளில் சில நேரங்களில் எதிர்பாராத விபத்துகள் நடந்து, அவை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி விடுகின்றன.
சமீபத்தில் நடந்த அப்படியான ஒரு நிகழ்வின் காணொளிதான் இப்போது பரவி வருகிறது. அந்த வைரல் காணொளியில், மணமக்கள் இருவரும் பட்டாசுகளுக்கு மத்தியில், ஒரு உயரமான நகரும் தள்ளுவண்டியில் (Troley) நின்று மேடையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். சுற்றிலும் விளக்குகள் எரிய, விருந்தினர்கள் கைதட்டி இந்த பிரமாண்டமான வரவேற்பைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
எல்லாம் அழகாக நடந்துகொண்டிருக்கையில், தள்ளுவண்டி சற்றுக் கீழிறங்கியபோது, அதைத் தாங்கிப் பிடித்திருந்த கயிறு திடீரென அறுந்துவிட்டது. கயிறு அறுந்ததும் தள்ளுவண்டி சாய்ந்து, மணமகன்-மணமகள் இருவரும் கீழே விழுந்தனர். இதைப் பார்த்தவுடன் விருந்தினர்கள் பதறிப்போய் அவர்களைத் தூக்க ஓடினர். அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை என்றாலும், அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
View this post on Instagram
இது போன்ற பிரமாண்டமான ஏற்பாடுகளின் பாதுகாப்பைச் சரிவர சோதிக்காததுதான் விபத்துக்குக் காரணம் என்று பலர் விமர்சித்துள்ளனர். மேலும், சமூக ஊடகங்களில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில், மக்கள் தங்கள் பாதுகாப்பைக் கூட மறப்பது சரியில்லை என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
