சாலை பாதுகாப்பு பற்றி மீண்டும் கவலை கிளப்பும் வகையில், ரெடிட்டில் பரவி வரும் ஒரு திகில் டேஷ்கேம் வீடியோ இணையத்தை அச்சத்திலே ஆழ்த்தியுள்ளது. நவம்பர் 20-ஆம் தேதியிட்ட அந்தக் காட்சியில், ஒரு குறுகிய சாலையை திடீரென ஓடிக் கடக்க முயன்ற குழந்தை, வேகமாக வரும் காரின் முன் ஒரு கணம் தோன்ற, “அய்யோ… இப்போ போச்சு!” என்று யாரும் யோசிக்கும் தருணத்தில், அதிர்ஷ்டக்காரனாக மயிரிழையில் தப்பிக்கிறான்.
காணொளி தொடங்கும் போது, நெரிசல் சூழ்ந்த சாலையில் கார் மெதுவாக நகர்கிறது. அதே சமயம், எதிர்புறத்திலிருந்து ஒரு சிறுவன் சாலையை நோக்கிப் பாய்ந்து வரும் காட்சி தென்படுகிறது. அருகில் நின்றிருந்த பெற்றோர் கவனச்சிதறலில் இருந்ததால், பிள்ளை தன்னிச்சையாக சாலை கடக்க முயன்றதாக தெரிகிறது.
How emergency braking saved one life. In India we need AEB as standard. What is your thought?
byu/Different-Front-9615 inDashcamindia
அடுத்த நொடியில், குழந்தை முன் பாய, கார் நேராக அவரை நோக்கி வருகிறது. வடிவேலு சொல்வது போல, “ஓட்டுனரே… பிரேக்கை பிடிங்கப்பா!” என்று கத்த வேண்டிய தருணம்! ஆனால் அதிர்ஷ்டவசமாக, காரின் அவசரகால தானியங்கி பிரேக்கிங் (AEB) சிஸ்டம் சரியான நேரத்தில் செயல்பட்டு, ஒரு அங்குல தூரத்தில் காரை நிறுத்தியது.
அதோடு ஒரு சர்ர் என்ற கடும் சத்தம் – இதைக் கேட்டவுடன் பெற்றோர் பதறி ஓடி வந்து குழந்தையை தூக்கிச் செல்வது வீடியோவில் தென்படுகிறது. பயம், அதிர்ச்சி எல்லாம் கலந்த நிலையில் அவர்கள் ஒரு மூச்சை விடுகிறார்கள். வீடியோ எங்கு எடுத்தது என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் காட்சியின் சூழலைப் பார்த்து, இது இந்தியாவில் எங்கோ நடந்திருக்கலாம் என நெட்டிசன்கள் கருதுகின்றனர்.
மேலும் இந்தக் காணொளியைப் பகிர்ந்த ரெடிட் பயனர், “AEB தான் இந்தக் குழந்தையின் உயிரை காப்பாத்திருக்கு. இந்தியாவில் AEB எல்லா வண்டிகளிலும் கட்டாயம் அமையணும். நீங்க என்ன சொல்றீங்க?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
