பிறந்தநாளில் நெருங்கியவர்களுக்கு யாரும் அறியாமல் இன்ப அதிர்ச்சி ஏற்படுத்துவது வழக்கம். அதுபோல், கணவர் ஒருவர் தனது மனைவிக்குத் தெரியாமல் முன்கூட்டியே கேக் வாங்கி பிரிட்ஜில் வைத்து, இரவு 12 மணிக்குத் தூக்கத்திலிருந்து எழுப்பி பிறந்தநாள் வாழ்த்து வழங்க திட்டமிட்டார்.

ஆனால் மனைவி இரவு 9.30 மணிக்கே தூங்கிவிட்ட நிலையில், கணவரும் செல்போனில் படம் பார்த்துக்கொண்டே ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்று விட்டார். இதற்கிடையில் இரவு 11 மணிக்கு வைக்கப்பட்டிருந்த அலாரம் சத்தமிட்டதும், அதைக் கேட்ட மனைவி அதை ஆப் செய்து மீண்டும் தூங்கினார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Kittu (@priiimalik21)

அடுத்த நாள் காலை பிரிட்ஜைத் திறந்து பார்த்த மனைவிக்கு கேக் கண்ணில் பட்டதும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. கணவர் ரகசியமாகத் தனக்காக செய்த ஏற்பாட்டை நினைத்து, அவர் கோபப்படாமல் சிரிப்புடன் மகிழ்ச்சியடைந்தார்.

இதையடுத்து, கேக் வெட்டிய வீடியோவை பதிவு செய்து தனது கணவருக்குக் காட்டியுள்ளார். அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததுடன், லட்சக்கணக்கானோர் விருப்பம் தெரிவித்ததால் அது விரைவில் வைரலாகியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Kittu (@priiimalik21)