தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது செங்கோட்டையனும் சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள விஜய் இல்லத்திற்கு சென்றுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கிய நிலையில் அவர் இன்று தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். கோபி தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த செங்கோட்டையன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் இன்று அவருடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் நாளை அவர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் திமுக அமைச்சர்களையும் அவர் சந்தித்து பேசியதாக கூறப்படும் நிலையில் தற்போது விஜயை சந்தித்துள்ளார். மேலும் இதன் காரணமாக அவர் நாளை தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவது உறுதி என்றே கூறப்படுகிறது.