காந்திய மக்கள் இயக்கம் தலைவராகப் பணியாற்றி வந்தவர் தமிழருவி மணியன். இவர் பின்னாளில் தனது இயக்கத்தை ‘காமராஜர் மக்கள் கட்சி’ என மாற்றி அரசியலில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், இந்தக் கட்சியை ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் அவர் இணைத்துள்ளார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) அங்கம் வகித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழருவி மணியன் நேற்று அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் இன்று இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
