பிரிட்டனைச் சேர்ந்த ‘பேக்பேக்கர் பென்’ (@backpacker.ben) என்ற வோல்கர், இந்தியாவில் தான் மேற்கொண்ட ரயில் பயணம் குறித்துப் பதிவிட்ட ஒரு ரீல் (Reel) வீடியோ, சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

அந்தப் பயணத்தை அவர் “மோசமான அனுபவம்” என்று குறிப்பிட்டுள்ளார். தனது பயணத்தின்போது அவருக்கு ஏற்பட்ட இரண்டு குறிப்பிட்ட சம்பவங்கள் மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Backpacker Ben (@backpacker.ben)

அவருக்கு ஏற்பட்ட முதல் சங்கடமான அனுபவம் என்னவென்றால், அவருக்கு அருகில் இருந்த ஒரு சக பயணி மீண்டும் மீண்டும் பென்னின் இருக்கையில் தனது காலை வைத்துள்ளார். பல முறை மரியாதையாகக் கேட்டுக்கொண்ட பின்னரும், அவர் தன் காலை எடுக்கவில்லை என்று பென் கூறியுள்ளார்.

இரண்டாவது சம்பவம் இன்னும் மோசமானது. பென் பயணிக்கும்போது, வெள்ளரிக்காய் (Cucumber) போன்ற நொறுக்குத் தீனியைச் சாப்பிட்டுக் கொண்டே கடந்து சென்ற ஒருவர், அவர் மீது எச்சில் துப்பியதாக பென் குற்றம் சாட்டியுள்ளார்.

“அவர் என்னைப் பார்த்துக் கொண்டே ஏதோ சொன்னார், அந்த எச்சில் முழுவதுமாக என் கையில் விழுந்தது” என்று அந்த வோல்கர் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ, பயணிகளின் பொது நாகரிகம் குறித்தும், வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது.