சமூக வலைத்தளங்களில், கல்லூரிக்கு வெளியே ஐந்து இளம் மாணவிகள் ஒருவரோடு ஒருவர் பயங்கரமாகச் சண்டையிட்டுக்கொள்ளும் வீடியோ ஒன்று வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் இரண்டு மாணவிகளுக்குள் ஏற்பட்ட சிறு வாய் தகராறு, பின்னர் தள்ளுமுள்ளுவாக மாறி, இறுதியில் அது தெருச் சண்டை வரை முற்றியுள்ளது.
ஆரம்பத்தில் இரண்டு மாணவிகள் சண்டையிட்டுக் கொண்டிருக்க, சிறிது நேரத்திலேயே அருகில் நின்றிருந்த மேலும் மூன்று மாணவிகளும் இந்தச் சண்டையில் இணைந்துகொண்டனர்.
Peak-Male content kinda Kalesh: pic.twitter.com/cF4ORyFZzG
— Ghar Ke Kalesh (@gharkekalesh) November 23, 2025
சண்டையிட்டுக் கொண்ட ஐந்து மாணவிகளும் முடி பிடித்து இழுப்பது, ஒருவரையொருவர் தரையில் தள்ளுவது, கைகளால் அடித்துக் கொள்வது என மிகவும் ஆக்ரோஷமாகச் சண்டையிட்டனர்.
ஆனால், அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மற்ற மாணவர்களோ, இந்தச் சண்டையை விலக்கி விடாமல், தங்கள் மொபைல் போன்களில் வீடியோ பதிவு செய்வதில் மும்முரமாக இருந்துள்ளனர்.
இது போன்ற சண்டைகளைப் பார்த்து மாணவர்கள் வேடிக்கை பார்த்தது பலரது விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது. இந்த வீடியோ எந்த நகரத்தைச் சேர்ந்தது என்பது குறித்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
