தற்கொலை முடிவெடுத்து ஒரு இளம்பெண் கட்டிடத்தின் உயரமான தளத்தில் இருந்து கீழே குதிக்க முயன்றபோது, ஒரு இளைஞர் சரியான நேரத்தில் தலையிட்டு அவரது உயிரைக் காப்பாற்றிய சிசிடிவி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் நடந்த இடம் ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் என்று தெரிகிறது.

அந்த வைரல் வீடியோவில், வெள்ளை நிற மேலங்கி அணிந்த ஒரு பெண், கட்டிடத்தின் கைப்பிடிச் சுவரில் (Railing) ஏறி கீழே குதிக்க முயல்கிறார். அருகே இருந்த ஒரு இளைஞர், அந்தப் பெண்ணின் நோக்கத்தை உடனடியாகப் புரிந்துகொண்டு, மின்னல் வேகத்தில் ஓடிச் சென்று அவரைப் பிடித்துத் தரையில் தள்ளுகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by ghantaa (@ghantaa)

இருப்பினும், அந்தப் பெண் மீண்டும் குதிக்க முயல்கிறார். அப்போது, அங்கிருந்த இரண்டாவது நபரின் உதவியுடன், அந்தப் பெண்ணை மீண்டும் கீழே குதிக்காதவாறு இருவரும் பிடித்து, பாதுகாப்பாக மேலே இழுத்து வருகின்றனர்.

அந்த இளைஞரின் தைரியமான, சரியான நேரத்துச் செயல் ஒரு உயிரைக் காப்பாற்றியதை உணர்ச்சிப்பூர்வமாகப் பார்த்த நெட்டிசனன்கள், அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.