டெல்லியில் உள்ள குடும்ப நல நீதிமன்றம் ஒன்றில் நிகழ்ந்த ஒரு வித்தியாசமான சம்பவம் குறித்த தகவலை, சந்தீப் ஷர்மா என்ற வழக்கறிஞர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். ஒரு தம்பதியினர் தங்கள் மகனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், மனைவியின் தங்கை தனது மருமகனைப் பார்ப்பதாகக் கூறி அடிக்கடி வீட்டிற்கு வந்துள்ளார்.

நாளடைவில், கணவனுக்கும் – மைத்துனிக்கும் இடையேயான இந்தச் சந்திப்பு அதிகரித்து, அவர்களது நட்பு கள்ளக்காதலாகப் பூத்தது யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. சாதாரணமாக இதுபோன்ற நிகழ்வுகளில், உடன் பிறந்த சகோதரிகள் எதிரிகளாக மாறுவதுதான் வழக்கம். ஆனால், இந்த விவகாரத்தில் மனைவி எடுத்த முடிவு நீதிமன்றத்தில் இருந்த அனைவரையும் வியப்படையச் செய்தது.

 

View this post on Instagram

 

A post shared by Adv Sandeep Verma (@advocate_sandeepverma127)

கணவன் – மைத்துனி இடையேயான கள்ளக்காதலை மனைவி கண்டுபிடித்தபோது, வீட்டில் பெரிய சண்டை வெடிக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்குப் பதிலாக அந்தப் பெண் ஒரு வித்தியாசமான முடிவை எடுத்தார். அவர் வழக்கறிஞரிடம், தன் கணவருக்கு விவாகரத்து அளித்து, தனது தங்கைக்கே அவரைக் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். முதலில் வழக்கறிஞருக்கே இது நம்ப முடியாமல் இருந்த போதும், அந்தப் பெண் நிலைமையை விளக்கிய பிறகு விவாகரத்துச் செயல்முறையை அவர் முடித்துள்ளார்.

இந்தச் சம்பவம் இத்துடன் நிற்கவில்லை. விவாகரத்துக்குப் பிறகு, அந்தப் பெண் தன் தங்கைக்குத் தானே மணப்பெண் அலங்காரம் செய்து, பிறகு நீதிமன்றத்திற்கே அழைத்து வந்து இரண்டாவது திருமணத்தையும் நடத்தி வைத்துள்ளார். ‘இந்தத் திருமணத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?’ என்று வழக்கறிஞர் கேட்டதற்கு, அவர்கள் இருவரும் மீண்டும் சேர வேண்டும் என்றுதான் தான் விரும்புவதாக அந்தப் பெண் கூறியது, நீதிமன்றத்தில் இருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.