கேரள மாநிலம், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரிப் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த நவம்பர் 18-ஆம் தேதி இரவு வெளியே சென்றுவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளார்.

ஆட்டோவில் இருந்து இறங்கி வீட்டுக்குள் சென்ற அந்தப் பெண் குளித்துக் கொண்டிருந்தபோது, குளியலறையின் ஜன்னல் வழியாக யாரோ ஒரு மர்ம நபர் தனது செல்போனில் வீடியோ எடுப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார். உடனடியாக அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து அந்த இளம்பெண் அளித்த புகாரின் பேரில், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அந்தப் பெண்ணின் குளியலறையைச் செல்போனில் வீடியோ எடுத்தது, அந்தப் பெண் ஏறி வந்த ஆட்டோவின் டிரைவரான, திருவனந்தபுரம், வெடி வச்சான் கோவில் பகுதியைச் சேர்ந்த ஜிபின் (35) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் ஜிபினை உடனடியாகக் கைது செய்து, அவரது செல்போனைப் பறிமுதல் செய்தனர். மேலும், அவரது செல்போனை ஆய்வு செய்து, வேறு ஏதேனும் காணொளிகள் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.