வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலைகொண்டுள்ளதன் காரணமாகத் தமிழகத்தில் மீண்டும் மழைப்பொழிவு இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (நவ. 25) கடலோரத் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலைகளில் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
