இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே கவுகாத்தியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவில், தென் ஆப்பிரிக்கா அணி மிகவும் வலுவான நிலையில் உள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா, தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 489 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவின் வேகமான பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. முதல் இன்னிங்ஸில் 288 ரன்கள் பின்தங்கிய நிலையில், தென் ஆப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்து, மொத்தம் 314 ரன்கள் முன்னிலை பெற்று இந்திய அணிக்குக் கடுமையான இலக்கை நிர்ணயித்துள்ளது.