டெல்லி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் நேற்று மாலை ஓய்வு பெற்ற நிலையில் இன்று புதிய நீதிபதியாக சூரியகாந்த் பதவியேற்றார். தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆர் கவாய் புதிய தலைமை நீதிபதிக்கு சூரியகாந்த் பெயரை பரிந்துரைத்த நிலையில் அவர் தலைமை நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அடுத்து வரும் 2027 ஆம் ஆண்டு வரை சூர்யகாந்த் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார். மேலும் உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூரியகாந்த் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
